உலக சுகாதார இயக்குனருக்கே கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் உலகில் தற்போது 4.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் உலக மக்கள் தங்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனருக்கேதற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து தான் தனிப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
உலக சுகாதார அமைப்பின் விதிப்படிதான் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தான் நலமாக இருப்பதாகவும் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் வீட்டிலேயே இருந்து தனது பணியை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

உலக மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் அறிவுரையும் ஏற்படுத்திய உலக சுகாதார அமைப்பின் இயக்குனருக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web