கொரோனா பாதிப்பு நிலவரம்; நம் நாட்டிற்காக கவலைப்படும் உலக சுகாதார நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்!
 
கொரோனா பாதிப்பு நிலவரம்; நம் நாட்டிற்காக கவலைப்படும் உலக சுகாதார நிறுவனம்!

தற்போது நம் நாட்டில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவுகிறது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தோடு தங்களது வீடுகளில் உள்ளனர். இந்நிலையிலும் மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் நாடெங்கும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் பல பகுதிகளில் இந்த கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது.tedores

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது தேவைப்படும் ஆக்சன் பற்றாக்குறையும்  தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை  உயிரிழப்புகளும் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிற்கு உதவி அளிக்கும் வண்ணமாக ஆக்சிசன் செறிவூட்டிகள்களையும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் மருத்துவர்களையும் அனுப்பி வைப்பதாக கூறி இருந்தது. மேலும் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக ரெட் ரோஸ் அதனாம்  உள்ளார்.

அவர் தற்போது சில தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது. மேலும் இந்தியாவுக்கு ஆக்சிசன் செறிவூட்டிகள் முகக் கவசங்கள் மருத்துவ கருவிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார்.

From around the web