முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!அறிவித்தது டெல்லி எய்ம்ஸ்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா உறுதியானது!
 
முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!அறிவித்தது டெல்லி எய்ம்ஸ்!

இந்தியாவானது 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார். அதனைத்தொடர்ந்து பல காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள்  பிரதமராக இருந்தனர். மேலும் இந்தியாவின் பொற்கால ஆட்சி பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இந்நிலையில்அவருக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா தற்போது இரண்டாவது அலையாக எழுந்து இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

corona

குறிப்பாக இந்தியாவில் டெல்லி மும்பை சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்திலும் இந்நோயின் தாக்கம் ஆனது கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுகிறது. மேலும் இந்தியாவில் தினமும் நோய்த்தொற்றின் காரணமாக புதிதுபுதிதாக கொரோனா பாதித்து கடந்த சில நாட்களாக புதிதாக இரண்டு லட்சத்தை கடந்து காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் உயிர்பலி எண்ணிக்கையானது அதிகரித்தும் காணப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. ஆயினும் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. பாரத பிரதமர் நரேந்திரமோடி சில தினங்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்.  தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும்  பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் அவர் தற்போது சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி மருத்துவமனையில் சில தினங்கள் முன்பாக அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அந்த மருத்துவமனையில் நம் பாரதத்தின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web