ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருகிறதா? பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது என்பதும்
 
ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருகிறதா? பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து BBV 152 என்ற தடுப்பு மருந்தை இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரனோ தடுப்பு மருந்தாக பரிசோதிக்கப்பட உள்ளது என்றும் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்றும், இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது

இந்த சோதனை வெற்றி அடைந்து கொரோனா வைரஸ்க்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரும் கருத்தாக இருக்கும் நிலையில் இந்த சோதனை வெற்றி பெரும் என்று விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

From around the web