சென்னையில் கொரோனா அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும்: ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸின் தாக்கம் 2000ஐ தாண்டி வருகிறது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நேற்று மாலை வரை சென்னையில் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 27 லட்சமாக உயரும்
 

சென்னையில் கொரோனா அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும்: ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸின் தாக்கம் 2000ஐ தாண்டி வருகிறது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நேற்று மாலை வரை சென்னையில் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 27 லட்சமாக உயரும் என்று ஆய்வில் தகவல் வந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னையில் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதால் சென்னையை விட்டு பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அக்டோபர் மாதம் கொரோனா வைரஸ் சென்னையில் உச்சத்தை அடையும் என்ற தகவல்கள் உள்ளதால் மீதி உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சென்னையில் இருந்து வெளியேற தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் 30ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் சென்னையை ஆயிரக்கணக்கானோர் காலி செய்துவிட்டு சொந்த ஊரை நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web