தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா: சொந்த ஊர் சென்றவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் சென்னையில் குரானா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது என்ற காரணத்தால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து விட்டு கூட்டம் கூட்டமாக சொந்த ஊரை நோக்கி சென்னையிலிருந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது சென்னையில் வழக்கம் போல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தாலும் மற்ற ஊர்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு
 

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா: சொந்த ஊர் சென்றவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் சென்னையில் குரானா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது என்ற காரணத்தால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து விட்டு கூட்டம் கூட்டமாக சொந்த ஊரை நோக்கி சென்னையிலிருந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சென்னையில் வழக்கம் போல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தாலும் மற்ற ஊர்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மதுரை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டட்தில் 225 பேருக்கு கொரோனா இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்களால்தான் கொரோனா பாதிப்பு அந்தந்த ஊர்களில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு வந்தோம். தற்போது சொந்த ஊரிலும் கொரனோ வைரஸ் அதிகரித்து வருவதால் நாங்கள் இனி வேறு எங்கு செல்வோம் என்று பொதுமக்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்து உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என்றும் வரும் அக்டோபரில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று கூறப்படுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்

From around the web