கர்நாடகாவில் ஒரே நாளில் 35 ஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ்!

கர்நாடகாவில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து ஏற்பட்டுள்ளது!
 
கர்நாடகாவில் ஒரே நாளில் 35 ஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ்!

தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வந்துள்ளது கொரோனா வைரஸ். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா  கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சில வாரங்களாக இந்த நோயின் தாக்கம் ஆனது இந்தியா முழுவதும் இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு பெரும் துன்பத்தையும் வேதனையும் கொடுத்து வருகிறது. மேலும் குறிப்பாக மகாராஷ்டிரா டெல்லி ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதற்கு போராட்டமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன.corona

மேலும் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. ஆயினும் கொரோனா  நோயினை கட்டுப்படுத்த முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. நமக்கு காவிரி நீர் கொடுக்கும் கர்நாடகாவில் கொரோனா  தாக்கம் அதிகம் காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் அங்கு ஒரே நாளில் 35000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அங்கு கொரோனா ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 35024 பேருக்கு கொரோனா   பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கர்நாடக மாநிலத்திலேயே அதிக படியாக பெங்களூரு நகரில் 19 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா   பாதிப்போடு மட்டுமின்றி பலியின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா   நோயால் பாதிக்கப்பட்டு 270 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவை வேதனைக்கு தள்ளியுள்ளது.ஆயினும் கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web