இந்தியாவில் 3 லட்சத்தினை நோக்கி படையெடுக்கிறது கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் மூன்றாம் நிலையினை எட்டியுள்ளது. அதாவது இந்தியாவில் புதிய உச்சமாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 3 லட்சத்தினை நோக்கி படையெடுக்கிறது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 297535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் 396 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்றையநாள்
 
இந்தியாவில் 3 லட்சத்தினை நோக்கி படையெடுக்கிறது கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் மூன்றாம் நிலையினை எட்டியுள்ளது.

அதாவது இந்தியாவில் புதிய உச்சமாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 3 லட்சத்தினை நோக்கி படையெடுக்கிறது.

இந்திய மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 297535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் 396 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் 3 லட்சத்தினை நோக்கி படையெடுக்கிறது கொரோனா!!

இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8498 ஆக உள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது, 3 லட்சத்தினை நெருங்குவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 38716 பாதிப்பு உள்ள நிலையில், தலைநகர் சென்னைதான் அதிக பாதிப்பினைக் கொண்டதாக உள்ளது. சென்னையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், கொரோனாவை ஒழிக்க முடியும் என்ற நோக்கில் தமிழக அரசு மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்களை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதன்மூலம் தமிழகம் கொரோனா பாதிப்பில் நல்ல முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, அதேபோல் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

From around the web