கொரோனா வைரஸ் தொற்றால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா ரத்து….

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வியாபார தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளதோடு, ஏப் 14 ஊரடங்கு உத்தரவையும் அறிவித்துள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனியில் பூச்சொரிதல் விழாவும் அதனை தொடர்ந்து சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா நாட்களில் தினமும் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டு செல்வார்கள். ஆயிரக்கணக்கில்
 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வியாபார தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளதோடு, ஏப் 14 ஊரடங்கு உத்தரவையும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  தொற்றால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா ரத்து….

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனியில் பூச்சொரிதல் விழாவும் அதனை தொடர்ந்து சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா நாட்களில் தினமும் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டு செல்வார்கள். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவதால் நோய் தொற்று வாய்ப்புள்ளதால் இந்த வருடத்தைய சித்திரை திருவிழாவும், பூச்சொரிதல் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கப்பட்ட பூச்சொரிதல் விழா வரும் ஏப் 4-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்றுடன் சமயபுரம் அம்பாளின் பச்சை பட்டினி விரதமும் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து வழக்கமாக சித்திரைதேர் திருவிழா தொடங்கி நடைபெறும். இதற்காக காப்புக்கட்டி பக்தர்கள் பச்சைபட்டிணி விரதம் அனுஷ்டிப்பர். கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் ஏப்ரல் 4ல் நடக்கவிருந்த தேர்திருவிழா ரத்து. பச்சைப்பட்டினி மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் வரும் 5-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே அம்மன் படத்தை வைத்து நைவேத்தியமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்-மோர் பானகம் முதலியனவற்றை வைத்து மாலையை கழற்றி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம் என்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

From around the web