மத்திய அரசுக்கு தொடரும் நெருக்கடி! கொரோனா தடுப்பூசி!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் வேண்டுகோள்!
 
மத்திய அரசுக்கு தொடரும் நெருக்கடி! கொரோனா தடுப்பூசி!

மக்கள் மத்தியில் உயிரை கொல்லும் நோய் என்றால் அனைவரும் முதலில் கூறுவது கொரோனா நோய் தான். இந்த கொரோனா நோயானது பல உயிர்களை வாங்கியுள்ளது. மேலும்  பலரின் வாழ்வாதாரங்களையும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்நிலையில் மிகவும் ஆபத்தான இந்த கொரோனா நோயானது முதலில் சீன நாட்டில் உருவானது.அதன் பின்னர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவியது. மேலும் ந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் கொரோனா பரவியது.

covid 19

தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.தமிழகம் மட்டுமின்றி டெல்லி ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கொரோனா அதிகரித்துள்ளது. மேலும் இன்றைய தினம் காலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். மேலும் அவர் முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மத்திய அரசுக்கு இந்த இந்த கொரோனா தடுப்பூசி  நெருக்கடி அதிகரித்து வருகிறது.

அதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டுமென சத்தீஸ்கர் முதல்வர் பிரதமர் நரேந்தி மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மகாராஷ்டிர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது சட்டீஸ்கர் முதல்வரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியிருந்தார்.ஆனால் தடுப்பூசி முதலில் யாருக்கு தேவைப்படுது அவர்களுக்கே முன்னுரிமையாக போடப்படும் எனவும் இதுவே தங்களது திட்டம் என்றும் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு எல்லாம்  கொரோனா தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்திருந்தது.

From around the web