கொரோனா  தடுப்பூசி தட்டுபாடில்லை! தேவையான அளவு இருப்பு உள்ளது!

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை தேவையான அளவு இருப்பில் குழந்தை தடுப்பூசி உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
 
கொரோனா தடுப்பூசி தட்டுபாடில்லை! தேவையான அளவு இருப்பு உள்ளது!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆனது முத்து நகரமாக காணப்படுகிறது. மேலும் இங்கிருந்து உப்பானது தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கே மீன்பிடி தொழிலும் உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் பிரச்சனை இருந்தது. இப்பேர்பட்ட தூத்துக்குடியிலும் கொரோனா அளவானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனாவானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

covaxin

ஆனால் ஒரு சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது வீரியம் உள்ளதாக மீண்டும் எழுந்து மக்களுக்கு மிகுந்த தொந்தரவு கொடுக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்திலும் சென்னை செங்கல்பட்டு கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.  மத்திய அரசின் சார்பில் சிலர் பல மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பல கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆயினும் தமிழகத்தில் ஒரு சில அரசு மருத்துவமனைகளில்  கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு என்று வதந்தி கிளம்பியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதன்படி தூத்துக்குடியில் தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லை என்று கூறினார். மேலும் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்  அவசியம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதனால் தூத்துக்குடியில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று தெளிவாக தெரிந்துள்ளது.

From around the web