சென்னை வந்தது கொரோனா தடுப்பு மருந்து: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சோதிக்க திட்டம்

இந்த நிலையில் கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தயாரான கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்து விரைவில் பொதுமக்களுக்கு செலுத்தி சோதிக்க திட்டமிட்டு உள்ளது 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் இந்திய அளவில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தயாரான கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்து விரைவில் பொதுமக்களுக்கு செலுத்தி சோதிக்க திட்டமிட்டு உள்ளது 

மேலும் இந்த மருந்தை சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் மட்டும் சோதிக்க மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்காக சென்னைக்கு வந்து உள்ளது.

முதல்கட்டமாக இந்த கோவிஷீல்டு மருந்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு சிலருக்கு மட்டும் சோதிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனையை வெற்றிகரமாக முடிந்தால் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல் முறையாக கொரனோ தடுப்பு பரிசோதனை மருந்தான கோவிஷீல்டு சென்னை வந்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது

From around the web