24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி? மீண்டுவருமா பொருளாதார வளர்ச்சி?

இந்தியாவில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
covid 19

தற்போது நம் இந்தியாவில் உள்ள பல மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் என்னவெனில் சில வாரங்களாக நம் இந்தியாவில் இருந்த கொரோனாவின் பாதிப்பானது தற்போது படிப்படியாக குறைந்து மக்களுக்கு இயல்பு வாழ்வாதாரத்தை  திரும்ப பெறும் நிலைக்கு வந்தது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும். இந்த நிலையில் இந்திய அளவில் தற்போது முதலிடத்தில் கொரோனா  பாதிப்பில் உள்ளது நம் தமிழ்நாடு. ஆயினும் நம் தமிழகத்தில் படிப்படியாக இந்த நோய் குறைந்து வருவது மக்களுக்கு இதமான செய்தியாக உள்ளது.covid

இந்நிலையில் தற்போது இந்தியாவில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை திரும்பப் பெறவும், அனைவரும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடவும் நிதி அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. மேலும் இரண்டு மாதங்களுக்கு வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம் என நிதி அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதன் வாயிலாக 70 கோடி பேருக்கு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டு விடலாம் என்று நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதற்கு சுமார் 113 கோடி டோஸ்கள் தேவைப்படும் என்றும் தினமும் 93 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் சமூக நோய் எதிர்ப்பு திறனை பெறலாம் என்றும் கூறுகிறது. மேலும் இரண்டாம் அலையால் உற்பத்தி, கட்டுமான துறைகள் ,நடப்பு காலாண்டில் சிறிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது என்றும் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் வரும் நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

From around the web