ஏப்ரல் 11ம் தேதி முதல் கோவையில் கொரோனா தடுப்பூசி முகாம்!

ஐந்து மண்டலங்களில், ஐந்து நடமாடும் மருத்துவக் குழுக்கள் கொண்டு 25 வாகனங்களுடன் மக்களுக்கு தடுப்பூசி பணி தொடக்கம்!
 
ஏப்ரல் 11ம் தேதி முதல் கோவையில் கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவு பெற்றது. மேலும் இது சட்டமன்ற தேர்தல் நடந்து சொல்லியிருந்தபடி ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது.  தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக கொரோனா  உள்ளது.

corona

தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கமானது தலைவிரித்து ஆடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் என மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் கடந்த முறை போடப்பட்ட ஊரடங்கினால் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு தொழில் முடக்கம் ஆனது. தற்போது தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா   அதிகரிக்கிறது. மேலும் கோவை மாநகராட்சி தற்போது  கொரோனா  தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதன்படி கோவையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் எனவும் தகவல். மேலும் கோவையில் உள்ள 5 மண்டலங்களிலும் ஐந்து நடமாடும் மருத்துவக் குழுக்கள் கொண்டுவரப்பட்டு 25 வாகனங்களுடன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப் பட்டதாகும் தகவல். எனவே கோவையில் முன் களப்பணியாளர்கள் முதியோர்கள் என இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

From around the web