விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கொரோனா! அவர் தனிமைப்படுத்தப்பட்டார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. மேலும் பல கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையையும், தேர்தல் வேட்பாளர்களையும் வெளியிட்டு வந்தன. தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் இன்றைய தினம் காலையில் இருந்து வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வேட்புமனுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவருக்கு என்று கொரோனா உறுதியானது. இதனால் அவர் தனிமைப்படுத்த பட்டதாகவும் தகவல் . விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரியான நரசிம் குமார் கால் கேக்கு கொரோனா. மேலும் அவர் விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதி தேர்தல் மேலிட செலவின பார்வையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் அருப்புக்கோட்டையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.