டிரம்புக்கு கொரோனா: ரத்து செய்யப்படுகிறதா அமெரிக்க அதிபர் தேர்தல்?

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில் திடீரென அவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அவரால் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது 

ஆனால் இது சாத்தியமில்லை என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே லட்சக்கணக்கானவர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு விட்டன. ஒரு சில மாநிலங்களில் வாக்குப்பதிவும் தொடங்கி விட்டது. இந்த நிலையில் திடீரென தேர்தலை ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியாது என்று கூறப்படுகிறது 

அதே போல் டிரம்புக்கு பதில் புதிய வேட்பாளர்கள் நியமிக்கப்படுவதிலும் இதே சிக்கல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டிரம்ப் அதற்குள் மீண்டும் உடல்நிலை குணமாகி திரும்பி வரவேண்டும் என்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web