சூரரை போற்று வில்லன் நடிகருக்கு கொரோனா: தடுப்பூசி போட்டுக்கொண்டும் பாதிப்பு என தகவல்

 

சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவிற்கும் அவர் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

சூரரைப்போற்று திரைப் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் பரேஷ் ரவால். பாலிவுட்டில் பிரபல நடிகரான இவர் சூரரைப்போற்று திரைப்படத்தில் விமான நிறுவனத்தின் அதிபராக நடித்திருந்தார். சூர்யா விமான நிறுவனம் ஆரம்பிக்க முயற்சிக்கையில் இவர் பல இடைஞ்சல்களை செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே

paresh rawal

இந்த நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி இவர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டதாக தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். V for Vaccine என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தது வைரலானது

இந்த நிலையில் தற்போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எப்படி என்று அதிர்ச்சி அடைந்த அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

From around the web