மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் எனக் கூறியவருக்கு கொரோனா!

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கட்டிப்பிடிப்பேன் எனக் கூறிய பாஜக பிரமுகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அனுபம் ஹஸ்ரா என்பவர் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தங்கள் கட்சியினர் கொரோனா வைரசுக்கு மட்டுமின்றி மம்தா பானர்ஜியுடனும் போராடி வருவதாக தெரிவித்தார்

மேலும் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனுபம் ஹஸ்ராவுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது 

இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அவர் சொன்னதை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது

From around the web