இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா: அதில் ஒருவர் திமுக!

 

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்பிக்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் திமுக எம்பி என்றும் வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாடாளுமன்ற கூட்டத் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு சரியாக தொடங்கியது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக தங்களது கருத்துக்களைப் பேசினர்

இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு இன்றைய கூட்டம் முடிவடைந்தத பின்னர் நாடாளுமன்ற எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 17 எம்பிக்களூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் திமுக எம்பி என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேர்களில் பாஜக எம்பிக்கள் 12 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 2பேர், சிவ சேனா, திமுக, ஆர்எல்பி கட்சிகளில் தலா ஒரு எம்பி என்பது குறிப்பிடத்தக்கது

From around the web