தமிழக பாஜக மூத்தத் தலைவருக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக வெகு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை விட மூன்று மடங்கு தினமும் பரவி வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் முக்கிய பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பதும் அதில் ஒரு சில பிரபலங்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது முக நூலில் குறிப்பிட்டுள்ளார் 

இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web