மகாராஷ்டிராவை கதற வைக்கும் கொரோனா! ஒரே நாளில் 351 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா காரணமாக 351 பேர் உயிரிழந்ததாக தகவல்!
 
மகாராஷ்டிராவை கதற வைக்கும் கொரோனா! ஒரே நாளில் 351 பேர் உயிரிழப்பு!

பொதுமக்களிடையே தற்போது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உயிர்க்கொல்லி நோயாக காணப்படுவது கொரோனா. இந்த கொரோனா நோயானது இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் வர தொடங்கியது .அதன் பின்னர் இந்தியாவின் பெரும் முயற்சி ஆன முழு ஊரடங்கு திட்டத்தின் மூலம் இந்நோயானது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் இந்நோயின் தாக்கம் ஆனது தற்போது மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

corona

மேலும் நம் தமிழ்நாட்டிலும் இந்நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகமாக காணப்படும் மாநிலமாக காணப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இந்நோயின் தாக்கம் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. மேலும் மகாராஷ்டிரா அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும்  மும்பை மற்றும் புனேவில் சில கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன. மேலும் அங்கு உள்ள கேளிக்கை விடுதிகள் போன்றவற்றிற்கும் தடை விதித்திருந்தன.

 இப்பேர்ப்பட்ட இந்த ஆட்கொல்லி நோயான கொரோனாவானது மகாராஷ்டிராவை மிகவும் உருக்குலைக்க வைத்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்நோயானது 58 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்நோயிலிருந்து 52412 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த கொரோனா நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் மக்கள் தினமும் கொரோனா நோய்க்காக அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக மகராஷ்டிராவில் இந்நோயானது 50 ஆயிரத்தை கடந்து அங்குள்ள மக்களை மிகுந்த வேதனையை அளிக்கிறது.

From around the web