ராகுல் காந்திக்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

 
ராகுல் காந்திக்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் பிரபலம் ராகுல் காந்தி அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து வந்த ராகுல் காந்திக்கு சமீபத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் 

இந்த நிலையில் அவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

rahul

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் தெரிவித்துள்ளார் 

ராகுல் காந்திக்கு கொரோனா என்ற தகவலால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web