இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!
 
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். கையுறை போன்றவைகளும் கொடுக்கப்பட்டு, அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.

corona

திமுக கட்சி  அதனுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் தனது வேட்பு மனு தாக்கல் செய்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா  உறுதியாகி உள்ளதாக தகவல்.

 இதனால் அவர் கோட்டூர்புரம் வீட்டில்தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இரண்டு கொரோனா  தடுப்பூசி செலுத்தியும் தற்போது கொரோனா  உறுதியாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்றைய தினம் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆயினும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் நெகட்டிவ் என வெளியாகியது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

From around the web