அரியலூரில் பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா!!

அரியலூரில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது
 
corona

தற்போதும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வு காணப்படுகிறது. ஏனென்றால் தற்போது நம் தமிழகத்தில் பள்ளிகள் பல மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விதமான எச்சரிக்கையோடு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றுள் மாணவர்களிடையே சமூக இடைவெளி, முக கவசம் கட்டாயம் போன்றவைகள் அடிப்படை நடைமுறையாக காணப்படுகிறது. ஏனென்றால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுவதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.corona

ஆனால் திறந்த சில நாட்களிலேயே பள்ளிகளில் பல மாணவ மாணவிகளுக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது .அதன் வரிசையில் தற்போது அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் இந்த கொரோனா நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாணவ மாணவிகளிடையே இந்த கொரோனா நோயின் தாக்கம் பரவத் தொடங்குகிறது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பள்ளி உள்ள மற்ற மாணவ மாணவிகளுக்கும் கொரோனா நோய் பரிசோதனை நிகழ்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web