இரண்டாயிரத்தை தாண்டி அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் 11 பேர்உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 2181 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!
 

தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவு வருவது கொரோனா தான். இந்த கொரோனா பாதிப்பானது முதலில் சீனாவில் உருவானது மேலும் சீனாவில் இருந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் எங்கும் பரவியது. தொடக்கத்திலேயே இந்தியாவிலும் தொற்றானது பரவியது. இதனால் இந்திய அரசு அனைத்துப் பகுதிகளுக்கும் ,நாடு எங்கும் முழு ஊரடங்கு உத்தரவினை அறிவித்தது.

corona

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பானது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது. மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பானது இரண்டாயிரத்தை தாண்டிதாக தகவல் .அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 2151 பேருக்கு கொரோனா பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 833 பேருக்கு கொரோனா பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 188 பேருக்கும் கோவையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1270 டிஸ்சார்ஜ் ஆனார்கள். மேலும் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தனது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12670 ஆகும்.

From around the web