வருகிறது கொரோனா 3.0: இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை

 
third wave

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களுடைய சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் இருந்து இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பில் பாதியாவது மூன்றாவது அலையில் ஏற்படும் என்றும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்றும் எனவே தடுப்பூசி பணிகளை துரிதமாக வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மருத்துவர் குழுவினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவில் மூன்றாவது அலை துவங்கி விட்டதாக ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தெரிவித்துள்ள நிலையில் மிக விரைவில் நாடு முழுவதும் மூன்றாவது அலை பரவும் என்பதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாவிட்டால் மூன்றாவது அலையின் வேகத்தை தடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு டெல்டா வைரஸ் பாதிப்பில் இருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளதால் அனைவரும் தடுப்பூசி கூட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web