மீண்டும் உச்சத்திற்கு செல்லும் கொரோனா உயிர்பலி!

மீண்டும் ஒருநாள் கொரோனா பலியானது ஆயிரத்தை தாண்டியுள்ளது
 
corona

தற்போது நம் இந்தியாவில் மக்கள் அனைவராலும் மிகவும் பேசப்பட்ட ஒரு வைரஸ் நுண்கிருமி என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்த கொரோனா தாக்கமானது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் இந்திய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் இந்த நோயினால் பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் பல பகுதிகளில் வேலை வாய்ப்பின்றி மக்கள் தவித்தனர் இத்தகைய சூழலில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன.corona

இதன் விளைவாக இந்த நோயானது சில தினங்களாக கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த நோயினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் சில தினங்களாகவே குறைவாகவே காணப்பட்டது ஆனால் அதிர்ச்சிகரமாக மீண்டும் இந்த நோயினால் உயிரிழக்கும்  விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரே நாளில் மீண்டும் இந்த நோயினால் உயிரிழக்கும்   எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 206 பேர் இந்த நோயினால் உயிரிழந்தனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் சில நாட்களாக ஆயிரத்துக்கு கீழ்  பதிவான நிலையில் மீண்டும் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது மேலும் இந்தியாவில் இதுவரை இந்நோயினால் 4.07 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்து 5 ஆயிரத்து 930 லிருந்து 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

From around the web