அம்பத்தூரில் கொரோனா சித்தா சிகிச்சை மையம் திறப்பு! "96 படுக்கைகள்"

சென்னையை அடுத்த அம்பத்தூர் சூரப்பட் வேலம்மாள் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது!
 
siddha

தற்போது நாடே ஒன்றியத்தில் எதிரி என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். கொரோனா எதிராக மத்திய அரசு மாநில அரசு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மிகவும் போராடி வருகின்றனர். இத்தகையவர்கள் போராட்டத்தையும் தாண்டி இந்த கொரோனா மனிதனுக்கு கண்டறியப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் நோய்க்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். நம் தமிழகத்தில் ஊரடங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.subramanian

மேலும் இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய அரசின் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்க தற்போது சித்த மருத்துவம் உபயோகிக்கப்படுகிறது. இதனை அறிந்த நம் தமிழக அரசும் கொரோனா சித்த  சிகிச்சை மையத்தை திறந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது சென்னை அடுத்த அம்பத்தூர் சூரப்பட் வேலம்மாள் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு 96 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. அதில் 80 ஆக்சிஜன் படுக்கைகளும் சிகிச்சை மையத்தில் உள்ளது. இதனை நம் தமிழகத்தின் அமைச்சரான சுப்பிரமணியன் திறந்துவைத்தார், கடந்தாண்டு நோய் பரவலின் போது சித்த மருத்துவத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நம் தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அம்பத்தூரில் சித்தா சிகிச்சை மையம் திறந்து உள்ளது வரவேற்கத்தக்கது.

From around the web