கொரோனா  கிடுகிடு உயர்வு! சென்னையில் கொரோனா மையங்கள் விரிவுபடுத்த ஆணை!

761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் அதற்கான தமிழகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது.

corona

இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது .இதனால் நாக்பூர்பகுதியில் மகாராஷ்டிரா அரசு , பகுதியை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், தமிழக அரசு சென்னை  கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைஅதிகரித்துள்ளது .அதன்படி 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.மேலும் ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் கொரோனா பாதிப்பானது இருந்தால் அப்பகுதியில் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web