ஒரே தெருவில் நாலு பேருக்கு கொரோனா; சீல் வைத்து அடைக்கப்பட்டது தெரு!

கரூர் மாவட்டம் வையாபுரி தெருவில் ஒரே தெருவில் வசிக்கும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது!
 
ஒரே தெருவில் நாலு பேருக்கு கொரோனா; சீல் வைத்து அடைக்கப்பட்டது தெரு!

மக்கள் மத்தியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமைக்கு மக்கள் உள்ளனர் என்பதே மிகுந்த சோகத்தை அளிக்கிறது, இத்தகைய பெயர் வாங்கிய இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டில் இந்த நோய் இந்தியாவில் வரத்தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது மிகவும் வேதனையான தகவலாக காணப்படுகிறது.

corona

குறிப்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முன்பை காட்டிலும் இந்நோயானது வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளையும் நடவடிக்கையும் எடுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ம் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி போன்ற ஒருசில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்நோயின் தாக்கம் வந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு கோயம்புத்தூர் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் அதிகம்  காணப்படுகிறது. தற்போது தமிழகத்தில் ஒரே தெருவில் அடுத்தடுத்து நான்கு பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் கரூர் மாவட்டம் வையாபுரி தெருவில் ஒரே தெருவில் வசிக்கும் 4 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா கண்டறியப்பட்டதால் அது முழுமையாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web