40 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா கதறும் கர்நாடகா!பீதியில் பெங்களூர்!

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது!
 
40 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா கதறும் கர்நாடகா!பீதியில் பெங்களூர்!

தற்போது சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரத்தில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தென் இந்தியாவில் அதிகம் காணப்படும்  மாநிலமாக உள்ளது கர்நாடக மாநிலம். கர்நாடகாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக 14 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் கொரோனா நோயானது கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் இரண்டு வார காலத்திற்கு மாநில அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.corona

ஆயினும் அத்தியாவசிய பொருள்கள் வியாபாரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் முதல்வராக உள்ளார் எடியூரப்பா. அவருக்கும் சில தினங்கள் முன்பாக கொரோனா  நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை முடிவு பெற்று வீடு திரும்பியுள்ளார். இப்படி கர்நாடகாவை ஆதிக்கம் செய்யும் கொரோனா வானது தற்போது 40 ஆயிரத்தை நெருங்கியதால் அம்மாநில மக்கள் மேலும் அதிர்ந்து உள்ளனர்.

மேலும் கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா  வைரஸ் பாதிப்பு பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பெங்களூருவில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 833 பேர் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் கர்நாடகத்தில் இன்று புதிய உச்சமாக 224 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் அம்மாநிலத்தை அதிர வைத்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

From around the web