தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! கொரோனா பாதிப்பு பத்து மடங்காக அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பானது பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறியுள்ளார்!
 
தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! கொரோனா பாதிப்பு பத்து மடங்காக அதிகரிப்பு!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வாக்கு பதிவானது நடைபெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்படுகிறது .அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளி கடைப்பிடித்தனர். அறிவுரைகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு உதவும் வண்ணமாக முக கவசம், சனிடைசர், கையுறைகள் போன்றவைகளும் கொடுக்கப்பட்டன.

chennai

 இந்நிலையில் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனாவின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில்  கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னையில் மண்டல அதிகாரிகளுடன் ஆலோசித்து பின் பேட்டியளித்துள்ளார். அதன்படி சென்னையில் கடந்த 30 நாட்களில் கொரோனாவின் பாதிப்பானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் பிப்ரவரி மாதத்தில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்த நிலையில் தற்போது 10 மடங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதனால் கடந்த முறை போல இந்த முறையும் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா? என ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களை அதிகரிக்க உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார்.

From around the web