தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! வயது வாரியாக பாதிப்பு நிலவரம்!

தலைநகர் சென்னையில் 30 முதல் 39 வயதினரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!
 
தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! வயது வாரியாக பாதிப்பு நிலவரம்!

மக்கள் மத்தியில் உயிர்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொரோனா வைரஸ் தான் .கொரோனாமுதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டதாக, சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.

corona

மேலும் தற்போது சில வாரங்களாக கொரோனா தாக்கமானது இந்தியாவில் அதிகரித்துள்ளது .இந்தியாவில் குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 39 வயதினரிடம் கணக்கு வெளியிடப்பட்டது .அதன்படி சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதம் பேருக்கும் பாதிப்பு உள்ளதாக தகவல்.  மேலும் 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும் 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் கொரோனாவால் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் 20 முதல் 29வயதினர் 17.93 சதவீத பாதிப்பு உள்ளனர் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.60சதவீதம் கொரோனா பாதிப்பு உள்ளது அதனால்கொரோனா 30 முதல் 39 வயதுக்கு அதிகமாகவும் 9வது உட்பட்ட குழந்தைகளுக்கு குறைவாகவும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதில் ஆண்கள் 59.71 பேரும் பெண்கள் 40.29 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

From around the web