கொரோனா  கட்டுப்பாடுகள் ஜூன் 15 வரை நீட்டிப்பு!! "லாக்டவுன் கிடையாது"

மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகள் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம்!
 
lockdown

தற்போது நம் நாட்டில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா  உள்ளது. காரணம் என்னவெனில் கொரோனா  பரவலானது இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக மீண்டும் எழுந்துள்ளது. இதனால் நாடே மிகவும் அச்சத்தில் உள்ளன. எனினும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு நல தகவல்கள் அவ்வப்போது வெளியாகின்றன. அதன்படி இந்தியாவில் கடந்த 20 தினங்களாக கொரோனா  குறைந்து வருவதாகவும் குணமடைவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இந்த கொரோனா  அதிகமாக இன்றளவும் காணப்படுகிறது.mamata

நம் தமிழகத்திலும் கொரோனா  காணப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் தற்போது மூன்றாம் முறையாக முதல்வராக உள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி. இந்நிலையில் தற்போது அவர் சில கட்டுப்பாடுகள் கூடிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி மேற்குவங்கத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் கொரோனா  பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டித்து மேற்குவங்க அரசு. மேலும் பொருளாதார வளர்ச்சி முடங்கி விடக்கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

From around the web