கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா பணிக்காக கண்காணி பணிகளை நியமித்து தலைமைச் செயலாளர் ஆணை!
 

 மக்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவும் ஓர் உயிரை குடிக்கும் நோயாக கொரோனா உள்ளது. தமிழகம் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கஷ்டங்களையும் கொடுத்து மக்கள் வாழ்வாதாரங்களை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வர தொடங்கியது. அதன்  சில வாரங்களாக இந்திய அளவில் மிகவும் கொரோனா அதிகரித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.

corona

இதனால் மக்கள் மிகவும் வேதனையிலும் கஷ்டத்திலும் உள்ளனர். மேலும் தற்போது அவர்களது பணிக்காக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன். மேலும் அவர் மாவட்ட வாரியாகவும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளார் .தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தாரேஸ் அகமது, செங்கல்பட்டில் சத்தியமூர்த்தி, கோவையில் முருகானந்தம், கடலூரில் ககன்தீப் சிங் பேடி, தர்மபுரியில் நீரஜ் மிட்டல் ,திண்டுக்கல்லில் மங்கத் ராம் சர்மா,  காஞ்சிபுரத்தில் சுப்பிரமணியன், ,கிருஷ்ணகிரியில் பீலா ராஜேஷ் கன்னியாகுமரியில் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் நியமிக்க பட்டதாக தகவல் வெளியாகியது.

மதுரையில் சந்திரமோகன், நாமக்கல்லில் தயானந்த் கட்டாரியா, நாகை மயிலாடுதுறையில் முனி ஆனந்தன் நியமிக்கப்பட்ட தாக, மேலும் நீலகிரியில் சுப்ரியா சாகு,  புதுக்கோட்டையில் சம்பு கல்லோலிகர், நியமிக்கப்பட்ட தாகவும், சேலத்தில் நசிமுதீன், ராணிப்பேட்டையில் லட்சுமி பிரியா ஆகியோர் அமைக்கப்பட்டதாக  தஞ்சையில் சுப்பையன், தேனியில் கார்த்திக் நியமனம் சிவகங்கையில் மகேசன் காசிராஜன், தூத்துக்குடியில் குமார் ஜெயந்த், திருச்சியில் ரீட்டா ஹரிஸ் ,நெல்லையில் அபூர்வா, திருப்பூரில் கோபால்  விருதுநகரில் மதுமதி  நியமிக்க பட்டதாக தகவல் வெளியாகியது.

From around the web