கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதல்வர் தீவிர ஆலோசனை!

கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள்  குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர். மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வண்ணமாக அவர்களுக்கு  முகக்கவசம், சனிடைசர் போன்றவைகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

corona

அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் சென்று தனது கட்சி மற்றும்கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். சில வாரங்களாக கொரோனா தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான  சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் தலைவிரித்தாடுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா அதிகரிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். மேலும் அவர் தலைமைச்  செயலகத்தில் ஆலோசனை நடைபெறுவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web