ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவிரித்தாடும்  கொரோனா!செங்கல்பட்டில் மோசம்!

தமிழகத்தில் ஒரே நாளில் எட்டாயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவிரித்தாடும் கொரோனா!செங்கல்பட்டில் மோசம்!

தமிழக மக்கள் மத்தியில் அம்மா அப்பா என்ற பேச்சுக்குப் பின்னர் அதிகமாக அழைக்கப்பட்டதாக தற்போது நிலவுகிறது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். இந்த கொரோனா கண்ணுக்கே தெரியாமல் மனிதனின் உடலுக்குள் சென்று மனிதன் உடம்பை வேதனைக்கு உள்ளாக்கியது மிகுந்த கொடுமையான செயல். மேலும் இந்த நோயானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயினும் தற்போது இந்நோயின் வீரியமானது அதிகரித்து இரண்டாவது அலையாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இந்தியா எங்கும் பரவுவது மிகுந்த வேதனை அளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நோயின் தாக்கம் வீரியம் உள்ளதாக காணப்படுகிறது.

corona

மேலும் தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் ஆனது அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. ஒரே நாளில் 8,000 தாண்டியது இந்த பாதிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 795 பேருக்கும் கோவையில் 583 பேருக்கும், திருவள்ளூரில் 453 பேருக்கும் , காஞ்சிபுரம் 303 பேருக்கும், திருப்பூர் 227 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் திருச்சியில் 273 , நெல்லையில்214 பேருக்கும் சேலத்திலிருந்து 214 பேருக்கும் ராணிப்பேட்டையில் 179 பேருக்கு மதுரையில் 167 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் 167 பேருக்கும் விழுப்புரத்தில் 167 பேர் தஞ்சையில் 151 பேருக்கும் திருவண்ணாமலையில் 125 பேருக்கும் குமரியில் 122 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் 130 பேருக்கும் திருவாரூரில் 121 பேருக்கும் நாமக்கல்லில் 109 பேரும் கடலூரில் 102 பேர்கள் திண்டுக்கல்லில்92 பேருக்கும் கண்டறியப்பட்டது.

From around the web