விழுப்புரத்தில் விளையாடும் கொரோனா; ஆயினும் பாதிப்பு குறைவு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய பட்டுள்ளது!
 
விழுப்புரத்தில் விளையாடும் கொரோனா; ஆயினும் பாதிப்பு குறைவு!

தற்போது தமிழகம் முழுவதும் ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது .மேலும் இதற்கு எதிராக போராடும் வண்ணமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்த்தும் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். எனிலும் இந்நோயின் தாக்கம் ஆனது இத்தகைய கட்டுப்பாடுகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கும் போடப்பட்டுள்ளன.vilupuram

 தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. கொரோனா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இன்னும் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயருகிறது. மேலும் இதனை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது .தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரியதாக பேசப்படும் வட மாவட்டமாக உள்ளது விழுப்புரம். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி பகுதி தனியாக பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக தற்போது உள்ளது.

 தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் தற்போது புதிதாக 185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 119 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் விழுப்புரத்தில் கொரோனா தாக்கம் பரவலாக உள்ளது தெரிய வந்துள்ளது.

From around the web