புதுச்சேரியில் புகுந்து விளையாடும் "கொரோனா"; ஒரே நாளில் 21 பலி!!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 930 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
corona

நம் நாட்டில் தற்போது அதிகமாக பேசப்படும் நோய் என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். நம் நாட்டில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கொரோனா வர தொடங்கியது. அதன் பின்னர் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கொரோனா நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் படுகின்றன. மேலும் பல மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.pudhucherry

ஆனால் எதிர்மறையாக நம் தமிழகத்தில் புதுச்சேரியில் ஆந்திராவில் இந்த நோயின் தாக்கம் ஆனது நடு நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இத்தகைய மாநிலங்களில் மேலும் பல்வேறு தடைகள் விதிக்கப்படுகின்றன.நமது அண்டை மாநிலம் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதன்படி புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா நோயானது 930 பேருக்கு பரவியதாக காணப்படுகிறது.

மேலும் அங்கு ஒரே நாளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் கொரோனாநோயின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.மேலும் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா நோயின் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web