கொரோனா காலம் மட்டும் இல்ல எப்பவுமே என்று சுங்கச்சாவடி பிரச்சனை தான்!

சுங்கச்சாவடி வழக்குகளில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது!
 
toll gate

தற்போது நம் இந்தியாவில் மூன்று விதமான போக்குவரத்து உள்ளன ,ஏன் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் மூன்று விதமான போக்குவரத்து நடைமுறையும் உள்ளன .அதன்படி வான்வழிப் போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்து கடல்வழி போக்குவரத்து ஆகும். இதில் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து என்று கூறினால் அதனை தரைவழி போக்குவரத்து என்றே கூறலாம். இந்தியாவிலும் பல்வேறு விதிமுறைகளும் பல்வேறு வசதிகளும் உள்ளன.high court

மேலும் நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. மேலும் சாலைகள் அதிகமாக தனியாருக்கு குத்தகைக்கு விடுவதால் அவர்கள் பெரும்பாலும் சுங்கச்சாவடிகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் தற்போது இது குறித்து உரிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை தடை கோரிய வழக்கு ஒன்று சில தினங்களாக தொடரப்பட்டது.

அதற்கு பதிலளிக்க தற்போது ஐகோர்ட் நீதிபதிகள் சில தகவல்களை கூறியுள்ளனர். அதன்படி கொரோனா  காலகட்டம் மட்டுமின்றி சுங்கச்சாவடிகள் எப்போதும் பிரச்சனையாகவே உள்ளது என்று ஐகோர்ட் நீதிபதிகள் தங்கள் கருத்தினை கூறியுள்ளனர். மேலும் சுங்கச்சாவடி குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஹைகோர்ட் கூறியுள்ளது.இதனால் சுங்கச்சாவடிகள் குறித்து ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web