பல மாவட்டங்களில் கொரோனா உச்சம்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

சென்னையில் ஒரேநாளில் 532 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் மத்தியில் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் உயிர்கொல்லி நோய் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவு வருவது கொரோனா.

corona

மேலும் இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது. மேலும் தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்துள்ளது. இது மத்தியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒரே நாளில் 532 பேருக்கு கொரோனா உறுதியானது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 149 பேருக்கும் கோவையில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா உறுதியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேருக்கும், தஞ்சாவூரில் 67 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 51 பேருக்கும்  கொரோனா உறுதி. மதுரையில் 40 பேருக்கும், குமரியில் 22 பேருக்கும், சேலத்தில் 33 பேருக்கு கொரோனா உறுதியானது

From around the web