புரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்த கொரோனா நோயாளி: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

கொரோனா வார்டில் இருந்து சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்கச் சென்ற கொரோனா நோயாளி ஒருவர் செய்த செய்கையால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், அரசு இயந்திரங்கள் என அனைத்து தரப்பும் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் கொரோனா குறித்த சீரியஸ் இல்லாமல் பலரும் உள்ளனர் இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 

புரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்த கொரோனா நோயாளி: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

கொரோனா வார்டில் இருந்து சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்கச் சென்ற கொரோனா நோயாளி ஒருவர் செய்த செய்கையால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், அரசு இயந்திரங்கள் என அனைத்து தரப்பும் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் கொரோனா குறித்த சீரியஸ் இல்லாமல் பலரும் உள்ளனர்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தினமும் புரோட்டா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதால் புரோட்டா வாங்குவதற்காக அந்த வார்டில் இருந்து சுவர் ஏறி குதித்து கடைக்கு சென்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது

இதனை சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கொரோனா நோயாளியை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். மேலும் அவர் எந்த கடையில் புரோட்டா சாப்பிட்டார், அப்போது யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது அடுத்து விசாரணையும் நடந்து வருகிறது

கொஞ்சம் கூட கொரோனாவின் சீரியஸை புரிந்து கொள்ளாமல் புரோட்டா வாங்குவதற்காக சுவர் ஏறி குதித்து அந்த நபரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web