கொரோனா பரவலை தடுக்க, வரும் பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் ரத்து

அக்னி தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமி தினங்களில் சித்தர்கள் அரூபமாய் திருவண்ணாமலையில் வலம் வருவதாய் நம்பப்படுகிறது. எனவே அவர்களோடு நாமும் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதும், சாலைகளில் நடமாடுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம், காது குத்து
 

அக்னி தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமி தினங்களில் சித்தர்கள் அரூபமாய் திருவண்ணாமலையில் வலம் வருவதாய் நம்பப்படுகிறது. எனவே அவர்களோடு நாமும் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதும், சாலைகளில் நடமாடுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம், காது குத்து மாதிரியான தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும்கூட தடை. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போலீசார் கண்காணித்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மக்களின் நலனுக்காகவும், அரசின் ஊரடங்கு உத்தரவினை பொருட்டும் பவுணர்மியையொட்டி அண்ணாமலையார் கோவிலில் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நித்யகால பூஜைகள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக்கொண்டு செய்விக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 7-ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மீறுபவர்களின்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

From around the web