கொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிசான் நகரைச் சேர்ந்த 80 வயதாகும் சியாமளாவுக்கு இரண்டு மகன்கள் முதல் மகன் நரசிம்மா, இரண்டாவது மகன் ஈஸ்வரா. சியாமளா உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சோலாப்பூர் சென்றிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட, அவர் உறவினர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட, காரில் ஐதராபாத் வந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். 14 நாட்களுக்குப் பின்னர் வீட்டிற்குச் சென்ற அவரை அவரது மூத்தமகன் வீட்டிற்குள் சேர்க்காமல் வீட்டிற்கு
 
கொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிசான் நகரைச் சேர்ந்த 80 வயதாகும் சியாமளாவுக்கு இரண்டு மகன்கள் முதல் மகன் நரசிம்மா, இரண்டாவது மகன் ஈஸ்வரா.  சியாமளா உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சோலாப்பூர் சென்றிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட,  அவர் உறவினர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட, காரில் ஐதராபாத் வந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். 14 நாட்களுக்குப் பின்னர் வீட்டிற்குச் சென்ற அவரை அவரது மூத்தமகன் வீட்டிற்குள் சேர்க்காமல் வீட்டிற்கு வெளியே உட்கார வைத்து கதவைப் பூட்டிவிட, வேகாத வெயிலில் அரைநாள் வெயிலில் உட்கார்ந்து இருந்தார்.

கொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்!!

அவரது மகனிடம் கேட்டபோது, தனது மகள் கர்ப்பிணியாக இருப்பதால் கொரோனா தொற்று எளிதில் அவருக்கு பரவிவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை என்றார்.

அதன்பின்னர் 2 வது மகன் வீட்டிற்குச் செல்ல அவரும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவரோ, மிகச் சிறிய வாடகை வீட்டில் குடியிருப்பதாய் கூறி அனுமதிக்கவில்லை.

இதனால் அங்கு விரைந்த சுகாதார அதிகாரிகள் மகன்கள் இருவரையும் அழைத்து மருத்துவ சான்றிதழைக் காண்பித்தனர். அதன்பின்னர் முதல் மகன் நரசிம்மா ஒருமனதாக சியாமளாவை வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த ஏரியாவில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web