ஆயிரத்தை தாண்டிய கொரோனா ஆயினும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!

புதுச்சேரியில் கடந்த ஒரே நாளில் 1122 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
ஆயிரத்தை தாண்டிய கொரோனா ஆயினும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!

நமது அண்டை மாநில மாக உள்ளது புதுச்சேரியில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு உள்ளது. மேலும் அதற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடு விதிகளையும் அம்மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன. மேலும் கடந்த விடுமுறை தினத்தன்று 55 மணி நேரம் முழு ஊரடங்கு அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும் இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அம்மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.tamilisai

மேலும் அம்மாநிலத்தில் பல்வேறு உத்தரவுகளையும் விதிமுறைகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டு வந்தார். அதன்படி அவர் சில தினங்களுக்கு முன்பாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதித்து அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.  தற்போது அவர் புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் பாரதிதாசன்பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை சௌந்தரராஜன் அதன்படி  புதுச்சேரியில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் வங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எக்காரணம் கொண்டும் மருத்துவர்கள் அனுமதியின்றி ரெம்டெசிவிர் தடுப்பூசி போட கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். இத்தகைய சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் ஆயிரத்தை கொரோனா கடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது .அதன்படி புதுச்சேரியில் ஒரே நாளில் 1122 பேருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web