சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! நகை தொழிலாளர் 14 பேருக்கு உறுதி!

சென்னையில் நகை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்!
 
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! நகை தொழிலாளர் 14 பேருக்கு உறுதி!

மக்கள் மத்தியில் உயிரை குடிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமி என்று பல பெயர்களால் வர்ணிக்கப்படும் ஒரு ஆட்கொல்லி நோய்  கொரோனா. கொரோனா முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தாக்கம் இன்றளவும் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா நோய் உள்ளது என்பது மிகவும் வேதனையான செய்தி தான். இந்தியாவிலும் இந்த கொரோனா நோயானது மீண்டும் அதிகரித்துள்ளது என்பதும் அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது.

corona

மேலும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவானது இந்தியாவில் பரவத் தொடங்கியது. ஆனால் இந்திய அரசு  எந்த ஒரு நாடும் கடைபிடிக்காத முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் இந்தியாவிற்கு பல நாடுகள் தரப்பிலும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் இந்தியாவின் இந்த திட்டத்தினை அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றனர்.  இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா தாக்கம் தலைவிரித்தாடுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கொரோனா நோயின் தாக்கம் தலைவிரித்தாடுகிறது. இதனால் சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு விதிகளை விதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 14 பேருக்கு கொரோனா  நோய் தொற்று உறுதியானது அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன்படி சென்னையில் தங்க நகை செய்யும் 14 தொழிலாளர்களுக்கு கொரோனா . இவர்கள் சவுகார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் இந்த 14 பேர் வடமாநில தொழிலாளர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்துடன் கவலையில் உள்ளனர்.

From around the web