சரிவை சந்திக்கும் கொரோனா: முடிவுக்கு வருகிறதா 2ஆம் அலை?

 
third wave

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 3 லட்சம், 4 லட்சம் என தினசரி கொரனோ பாதிப்பு இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து இன்று ஒரு லட்சமாக குறைந்துள்ளது. இதனால் விரைவில் இந்தியாவில் இரண்டாம் அலை முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. சரிவை சந்தித்து வரும் கொரோனாவால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை பார்ப்போம்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 636 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், இதனால் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சமாக அதிகரிப்பு எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் 14.01 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 2,427 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், கொரோனாவால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,49,186 ஆக அதிகரிப்பு எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 23.27 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web