கொரோனா: தாய் மற்றும் உடன்பிறப்பை பறிகொடுத்த பச்சிளம் குழந்தை!!

இந்தியாவில் 226770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உள்ளது. வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 27256 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை. அந்தவகையில் நேற்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இது சென்னைப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையைச் சார்ந்த
 
கொரோனா: தாய் மற்றும் உடன்பிறப்பை பறிகொடுத்த பச்சிளம் குழந்தை!!

இந்தியாவில் 226770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உள்ளது.

வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 27256 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை.

அந்தவகையில் நேற்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இது சென்னைப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: தாய் மற்றும் உடன்பிறப்பை பறிகொடுத்த பச்சிளம் குழந்தை!!

அதாவது சென்னையைச் சார்ந்த கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தநிலையில், ஒரு குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

கொரோனா பரிசோதனை குழந்தைக்கும், தாயாருக்கும் மேற்கொள்ளப்பட கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்தப் பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

குழந்தை நலமாக உள்ளநிலையில் சிகிச்சை பலனின்றி, அந்தப்பெண் உயிர் இழந்தார்.

From around the web