தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து இன்று முதல் விற்பனை!

 
2dg medicine

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய்க்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பொடி மருந்து இன்று முதல் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா நோய்க்கு ஏற்கனவே தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து என கூறப்படும் 2DG பொடி மருந்து விநியோகம் தொடங்குகிறது

கொரோனா நோய்க்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பொடி மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ள நிலையில் இன்று மட்டும் 10 ஆயிரம் 2DG கொரோனா மருந்து பாக்கெட்டுகள் சந்தையில் கிடைக்கும் என அறிவித்துள்ளார். இந்த மருந்து கொரோனாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web