சேட்டாக்கள் ஊரில் சேட்டை செய்யும் கொரோனா!இதுவரை இல்லாத புதிய உச்சம்!

கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!
 
சேட்டாக்கள் ஊரில் சேட்டை செய்யும் கொரோனா!இதுவரை இல்லாத புதிய உச்சம்!

தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது. இதனால் இந்திய அரசானது மிகவும் சோதனைகளும் வேதனைகளும் உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது நாளுக்கு நாள் வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. இடையில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.corona

மேலும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. ஆயினும் இந்நோயின் வீரியமானது அதிகமாகவே காணப்படுகின்றன. மேலும் நமது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது அம்மாநில மக்களை மிகவும் பதற வைத்துள்ளது.

அதன்படி கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கேரளாவில் இதுவரை இல்லாத உச்சமாக நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி. மேலும் கேரளாவில் ஒரே நாளில் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

From around the web